Nov 29, 2026
Thisaigal NewsYouTube

கேஎல்ஐஏ-வில் பரபரப்பு: கண்ணாடிக் கட்டமைப்பில் ஏறிய நேபாள நாட்டவர் மருத்துவமனையில் அனுமதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கேஎல்ஐஏ-வில் பரபரப்பு: கண்ணாடிக் கட்டமைப்பில் ஏறிய நேபாள நாட்டவர் மருத்துவமனையில் அனுமதி

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று, அங்குள்ள செயற்கைக்கோள் முனையக் கட்டடத்தின் கண்ணாடிக் கட்டமைப்பில் ஏறி, பரபரப்பை ஏற்படுத்திய நேபாள நாட்டவர், அன்றைய தினமே தனது சொந்த நாட்டுக்குத் திரும்பவிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

50 வயதுடைய அந்நபர், நேற்று மாலை சுமார் 4.55 மணியளவில் அனைத்தலக புறப்பாட்டுப் பகுதியில் உள்ள நுழைவாயில் அருகே கண்ணாடிக் கட்டமைப்பின் மீது ஏறியதாகக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து, பாதுகாப்புப் பணியாளர்கள் அவரைச் சமாதானப்படுத்தி, கேஎல்ஐஏ முனையம் 1 போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக கேஎல்ஐஏ மாவட்டக் போலீஸ் தலைவர் எம்.ரவி தெரிவித்துள்ளார்.

மேலும், முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் மாலை 6 மணியளவில், நேபாளத்திற்கு செல்லும் விமானத்தில் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தது தெரியவந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அந்த நபர் சிகிச்சைக்காக காஜாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள மனநலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
இராணுவ விமானங்களில் போதைப் பொருள் கடத்தும் துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது: அன்வார் திட்டவட்டம்

இராணுவ விமானங்களில் போதைப் பொருள் கடத்தும் துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது: அன்வார் திட்டவட்டம்

மைசைரன் சோதனை வெற்றி: நாடெங்கிலும் ஒரே நேரத்தில் அனுப்பப்பட்டதாக அமைச்சர் ஃபஹ்மி ஃபாசில் தகவல்

மைசைரன் சோதனை வெற்றி: நாடெங்கிலும் ஒரே நேரத்தில் அனுப்பப்பட்டதாக அமைச்சர் ஃபஹ்மி ஃபாசில் தகவல்

கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது: 66 வயது மூதாட்டி பலி, இருவர் காயம்

கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது: 66 வயது மூதாட்டி பலி, இருவர் காயம்

மறைந்த சந்திரா முஸாஃபார் பல தலைமுறை சமூக ஆர்வலர்களுக்கு ஊக்கமாகத் திகழ்ந்தவர்: அலிரான்

மறைந்த சந்திரா முஸாஃபார் பல தலைமுறை சமூக ஆர்வலர்களுக்கு ஊக்கமாகத் திகழ்ந்தவர்: அலிரான்

கோலாலம்பூரில் திடீர் வெள்ளம்: கார் சிக்கியது, மற்றொரு கார் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது

கோலாலம்பூரில் திடீர் வெள்ளம்: கார் சிக்கியது, மற்றொரு கார் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது

வெள்ளப் பாதிப்பு: கோலா சிலாங்கூர் மக்களுக்கு கூடுதல் உதவி வழங்க சிலாங்கூர் அரசு திட்டம்

வெள்ளப் பாதிப்பு: கோலா சிலாங்கூர் மக்களுக்கு கூடுதல் உதவி வழங்க சிலாங்கூர் அரசு திட்டம்