Nov 28, 2026
Thisaigal NewsYouTube

கோலாலம்பூரில் திடீர் வெள்ளம்: கார் சிக்கியது, மற்றொரு கார் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கோலாலம்பூரில் திடீர் வெள்ளம்: கார் சிக்கியது, மற்றொரு கார் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது

கோலாலம்பூரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், ஜாலான் செந்தூல் செலாத்தான் பகுதியில் கார் ஒன்று வெள்ள நீரில் சிக்கியது. அதிலிருந்த அனைவரும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

மாலை 4.01 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, செந்தூல் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த ஆறு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதற்கிடையில், ஜாலான் சுல்தான் இஸ்மாயில் பகுதியில் தி ஃபேஸ் சுயிட்ஸ் அருகே ஆற்றங்கரையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு கார், வெள்ள நீரின் வேகமாக நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றில் விழுந்தது.

சம்பவத்தின்போது காரின் உரிமையாளர் அப்பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டதாகத் தீயணைப்புத் துறை தெரிவித்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேல் நடவடிக்கைக்காக போலீஸ் துறையிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மறைந்த சந்திரா முஸாஃபார் பல தலைமுறை சமூக ஆர்வலர்களுக்கு ஊக்கமாகத் திகழ்ந்தவர்: அலிரான்

மறைந்த சந்திரா முஸாஃபார் பல தலைமுறை சமூக ஆர்வலர்களுக்கு ஊக்கமாகத் திகழ்ந்தவர்: அலிரான்

வெள்ளப் பாதிப்பு: கோலா சிலாங்கூர் மக்களுக்கு கூடுதல் உதவி வழங்க சிலாங்கூர் அரசு திட்டம்

வெள்ளப் பாதிப்பு: கோலா சிலாங்கூர் மக்களுக்கு கூடுதல் உதவி வழங்க சிலாங்கூர் அரசு திட்டம்

விமானப்படைத் தளங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்: அமைச்சரவை ஒப்புதல்

விமானப்படைத் தளங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்: அமைச்சரவை ஒப்புதல்

அரசியல் நெருக்கடியிலும் வளர்ச்சித் திட்டங்கள் தொடரும்! மக்களுக்கு பிரதமர் அன்வார் உறுதி

அரசியல் நெருக்கடியிலும் வளர்ச்சித் திட்டங்கள் தொடரும்! மக்களுக்கு பிரதமர் அன்வார் உறுதி

கலைநிகழ்ச்சி பாணியிலான பட்டமளிப்பு நிகழ்ச்சி! பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து யுனிகேஎல் மன்னிப்புக் கோரியது

கலைநிகழ்ச்சி பாணியிலான பட்டமளிப்பு நிகழ்ச்சி! பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து யுனிகேஎல் மன்னிப்புக் கோரியது

நஜிப்பின் வீட்டுக் காவலுக்கு எதிராக ஊழல் எதிர்ப்பு பேரணி! கோலாலம்பூரில் 150 பேர் முழக்கம்

நஜிப்பின் வீட்டுக் காவலுக்கு எதிராக ஊழல் எதிர்ப்பு பேரணி! கோலாலம்பூரில் 150 பேர் முழக்கம்