மறைந்த சமூகச் சீர்திருத்தவாதியும் அரசியல் ஆய்வாளருமான டாக்டர் சந்திரா முஸாஃபார், நீதி, சமத்துவம் மற்றும் மத நல்லிணக்கத்திற்காகப் பல தலைமுறை சமூக ஆர்வலர்களுக்கு ஊக்கமளித்தவர் என அலிரான் அமைப்பு தெரிவித்துள்ளது.
பல இன மக்களை உள்ளடக்கிய சமூகச் சீர்திருத்த இயக்கமான அலிரான் அமைப்பை உருவாக்கிய சந்திரா முஸாஃபார், 1991ஆம் ஆண்டு வரை அதன் தலைவராகப் பணியாற்றியதாக அந்த அமைப்பின் தலைவர் அனில் நெட்டோ குறிப்பிட்டார்.
அவரது பணிகள் இன, மத வேறுபாடுகளைக் கடந்து சமூகப் பிரச்சினைகளில் ஈடுபடப் பலரைத் தூண்டியதாகவும் அவர் கூறினார்.
79 வயதில் நேற்று காலமான சந்திரா முஸாஃபார், கெடா, பெடோங்கில் பிறந்தவர். அவரது நல்லுடல் இன்று காலை 11.15 மணிக்கு புக்கிட் கியாரா முஸ்லிம் மையத்துக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.








