Nov 28, 2026
Thisaigal NewsYouTube

கலைநிகழ்ச்சி பாணியிலான பட்டமளிப்பு நிகழ்ச்சி! பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து யுனிகேஎல் மன்னிப்புக் கோரியது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கலைநிகழ்ச்சி பாணியிலான பட்டமளிப்பு நிகழ்ச்சி! பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து யுனிகேஎல் மன்னிப்புக் கோரியது

கோலாலம்பூர் பல்கலைக்கழகமான யுனிகேஎல், தனது 23ஆவது பட்டமளிப்பு விழாவில் இடம் பெற்ற கலைநிகழ்ச்சி பாணியிலான பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக மன்னிப்பு கோரியுள்ளது.

மக்கள் அறக்கட்டளை மன்றமான மாராவின் தலைவர் அஷ்ரஃப் வாஜ்டி டுசுக்கி விடுத்த கண்டனத்தைத் தொடர்ந்து இந்த மன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டமளிப்பு விழா என்பது கல்விச் சாதனைகளை அங்கீகரிக்கும் முக்கிய நிகழ்வு என்பதால், அதன் கண்ணியமும் ஒழுக்கமும் பாதுகாக்கப்பட வேண்டும் என யுனிகேஎல் தெரிவித்துள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாகத் திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவற்றை விரைவில் மாராவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், பட்டமளிப்பு விழாக்களை நடத்துவதற்கான நெறிமுறைகளை மேம்படுத்துமாறு மாரா தலைமை இயக்குநருக்கும் யுனிகேஎல் நிர்வாகத்திற்கும் அஷ்ரஃப் வாஜ்டி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 21 முதல் 26ஆம் தேதி வரை கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தின் மெர்டேக்கா மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் 11 அமர்வுகளாக மொத்தம் 8,147 பட்டதாரிகள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →