Nov 29, 2026
Thisaigal NewsYouTube

மைசைரன் சோதனை வெற்றி: நாடெங்கிலும் ஒரே நேரத்தில் அனுப்பப்பட்டதாக அமைச்சர் ஃபஹ்மி ஃபாசில் தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மைசைரன் சோதனை வெற்றி: நாடெங்கிலும் ஒரே நேரத்தில் அனுப்பப்பட்டதாக அமைச்சர் ஃபஹ்மி ஃபாசில் தகவல்

மலேசியாவின் தேசிய அவசரகால எச்சரிக்கை அமைப்பான மைசைரன் மூலம் அனுப்பப்பட்ட சோதனை எச்சரிக்கைகள், நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் பொதுமக்களின் கைப்பேசிகளைச் சென்றடைந்ததாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்துள்ளார்.

பெர்லிஸ் மாநிலத்தின் பாடாங் பெசார், சபா மாநிலத்தின் புலாவ் செபாதிக் மற்றும் தாவாவ் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், இந்த எச்சரிக்கை அறிவிப்பானது அப்பகுதி மக்களுக்கு கிடைத்தது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இன்றைய, நாடு தழுவிய சோதனையின் போது, தேசிய தகவல் பரப்புதல் மையமான நாடி (NADI) மற்றும் தகவல் துறை ஆகியவை, நேரலையில், எச்சரிக்கை கிடைத்தது குறித்த தகவல்களை வழங்கியதாகவும் ஃபாஹ்மி தெரிவித்துள்ளார்.

இந்த மைசைரன் சோதனைக்குப் பின்னர், கோலாலம்பூரில் உள்ள ஸ்மார்ட் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஃபாஹ்மி ஃபாட்ஸில், சோதனைச் செய்தியை அனுப்புவதற்கு உறுதிப்படுத்தல் பொத்தானை அழுத்தியதும், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் எச்சரிக்கை அறிவிப்புகள் சென்றடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ-வில் பரபரப்பு: கண்ணாடிக் கட்டமைப்பில் ஏறிய நேபாள நாட்டவர் மருத்துவமனையில் அனுமதி

கேஎல்ஐஏ-வில் பரபரப்பு: கண்ணாடிக் கட்டமைப்பில் ஏறிய நேபாள நாட்டவர் மருத்துவமனையில் அனுமதி

இராணுவ விமானங்களில் போதைப் பொருள் கடத்தும் துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது: அன்வார் திட்டவட்டம்

இராணுவ விமானங்களில் போதைப் பொருள் கடத்தும் துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது: அன்வார் திட்டவட்டம்

கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது: 66 வயது மூதாட்டி பலி, இருவர் காயம்

கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது: 66 வயது மூதாட்டி பலி, இருவர் காயம்

மறைந்த சந்திரா முஸாஃபார் பல தலைமுறை சமூக ஆர்வலர்களுக்கு ஊக்கமாகத் திகழ்ந்தவர்: அலிரான்

மறைந்த சந்திரா முஸாஃபார் பல தலைமுறை சமூக ஆர்வலர்களுக்கு ஊக்கமாகத் திகழ்ந்தவர்: அலிரான்

கோலாலம்பூரில் திடீர் வெள்ளம்: கார் சிக்கியது, மற்றொரு கார் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது

கோலாலம்பூரில் திடீர் வெள்ளம்: கார் சிக்கியது, மற்றொரு கார் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது

வெள்ளப் பாதிப்பு: கோலா சிலாங்கூர் மக்களுக்கு கூடுதல் உதவி வழங்க சிலாங்கூர் அரசு திட்டம்

வெள்ளப் பாதிப்பு: கோலா சிலாங்கூர் மக்களுக்கு கூடுதல் உதவி வழங்க சிலாங்கூர் அரசு திட்டம்