Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தென்கொரியா சென்றடைந்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தென்கொரியா சென்றடைந்தார்

சோல், நவ.25-


பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தென்கொரியாவிற்கு மூன்று நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ளார்.

பிரதமரின் சிறப்பு விமானம், தென்கொரியா தலைநகர் சோலில் மலேசிய நேரப்படி நேற்றிரவு 9.55 மணியளவில் தரையிறங்கியது.

விமான நிலையத்தில் பிரதமரை தென்கொரியாவின் பொது விவகாரங்களுக்கான துணை அமைச்சர் லீ ஜாய்வுங் மற்றும் மலேசியத் தூதர் இயோ சியுங் பய் வரவேற்றனர்.

மலேசியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையிலான இரு வழி உறவை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமரின் இந்த வருகை அமைந்துள்ளது.

கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவுடன் மலேசியா கொண்டுள்ள தூதரக உறவு, அடுத்த ஆண்டுடன் 65 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி பிரதமரின் தென்கொரியா வருகை முத்தாய்ப்பு வைத்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →