கோலாலம்பூர், ஆகஸ்ட்.19-
நாட்டின் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கக்கூடியவர்களில் அரசியல்வாதிகளும் அடங்குவர் என்பதை முன்னாள் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் ஒப்புக் கொண்டார்.
நாட்டின் உயர்ந்த சட்டத்தைப் பாதுகாக்கத் தாம் கூறியுள்ள இந்த விவகாரம் தீவிரமாக ஆராயப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் அரசியல்வாதிகள் ஆவர். இதனைத் தாம் மேலும் விரிவாகக் கூற வேண்டிய அவசியமில்லை என்று தாம் கருதவதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று செவ்வாய்க்கிழமை கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அல்லியன்ஸ் நிர்வாக மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 'மலேசியாவின் கூட்டரசு அரசியலமைப்பின் புனிதம் மற்றும் அச்சுறுத்தல்கள் மீதான விரிவுரை நிகழ்வில் துன் தெங்கு மைமுன் துவான் மாட் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் துன் தெங்கு மைமுன் இதனைத் தெரிவித்தார்.








