Jul 30, 2026
Thisaigal NewsYouTube
14 ஆண்டுகளில் சிறந்த அடைவு நிலையை ரிங்கிட் பெற்றுள்ளது
தற்போதைய செய்திகள்

14 ஆண்டுகளில் சிறந்த அடைவு நிலையை ரிங்கிட் பெற்றுள்ளது

Share:

ஆ௧ஸ்ட் 03-

மலேசியாவின் பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு நிதி வரவுகளின் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் மத்தியில் கடந்த 14 ஆண்டுகளுக்கு பிறகு மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சிறந்த அடைவு நிலையை பதிவு செய்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை பதிவான ரிங்கிட்டின் மதிப்பு, டாலருக்கு எதிராக 1.1 விழுக்காடு உயர்ந்துள்ளது. இது 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதன் சிறந்த அடைவு நிலையை தொடர்ந்து 10 ஆவது நாளாக நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டு கால இழப்புகளுக்கு பிறகு ஆசிய நாடுகளை விட மிக சிறந்த அடைவு நிலையை ரிங்கிட் பதிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு 112 மில்லியன் அமெரிக்க டாலரை அல்லது 505.61 மில்லியன் மலேசிய ரிங்கிட்டை உள்ளூர் பங்குகளில் செலுத்திய உலகளாவிய நிதிகளின் வட்டியைத் திரும்ப பெற இது உதவியுள்ளது.

குறிப்பாக, தென்கிழக்காசிய நாடான மலேசியாவின் பொருளாதாரம் மீட்சி பெறத் தொடங்கியுள்ளது. இரண்டாம் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அனைத்து மதிப்பீடுகளையும் முறியடித்து, ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு இது வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை