Dec 4, 2025
Thisaigal NewsYouTube
போலி சிறப்பு அட்டை: இந்தியப் பிரஜை கைது
தற்போதைய செய்திகள்

போலி சிறப்பு அட்டை: இந்தியப் பிரஜை கைது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.25-

போலி சிறப்பு அட்டையைப் பயன்படுத்தி அதிகாரிகளை நம்ப வைக்க முயற்சி செய்த இந்திய நாட்டைச் சேர்ந்த மாது ஒருவர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை மலேசியாவை விட்டு, இந்தியாவிற்குத் திரும்புவதற்கு 45 வயது இந்திய மாது விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் முயற்சித்த போது, அந்த மாது பயன்படுத்திய ஸ்பெஷல் பாஸ் என்ற சிறப்பு அட்டை போலியானது என்பது உறுதிச் செய்யப்பட்டதாக மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு அமலாக்க ஏஜென்சி தெரிவித்தது.

1959 ஆம் ஆண்டு மலேசிய குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் அந்த இந்தியப் பிரஜை தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த ஏஜென்சி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News