மலேசியாவின் எதிர்காலம், எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கும், தீர்மானிப்பதற்கும் வல்லரசுகள் ஒரு போதும் அனுமதிக்கப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மலேசியா தன்னிச்சையாக செயல்படக்கூடிய ஒரு சுதந்திர நாடாகும். தனது அரசுரிமையை நிலைநாட்டிக்கொள்வதிலும், நாட்டிற்கு எது சிறந்தது என்பதை தீர்மானிப்பதிலும் அது சுயமாக செல்படுமே தவிர மற்றவர்கள் தலையிடுவதற்கு ஒரு போதும் அனுமதிக்கப்படாது என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
சீனாவிற்கு நான்கு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் அன்வார், பெய்ஜிங்கில் தலைசிறந்த பல்கலைக்கழகமான சிங்குவா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய பின்னர் சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான போட்டித் தன்மைக் குறித்து மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கையில் அன்வார் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

தற்போதைய செய்திகள்
மலேசியாவின் எதிர்காலத்தை வல்லரசுகள் தீர்மானிக்க அனுமதிக்கப்படாது! பிரதமர் அன்வார் திட்டவட்டம்
Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


