Mar 24, 2026
Thisaigal NewsYouTube
எதிர்தடத்தில் வாகனத்தை செலுத்திய ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

எதிர்தடத்தில் வாகனத்தை செலுத்திய ஆடவர் கைது

Share:

ஜோகூர்,ஜூலை 13-

ஜோகூர், பத்து பஹத், ஜலான் அயெர் ஹிதம் குலுவாங் சாலையில், எதிர்த்தடத்தில் ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்திய 46 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

இம்மாதம் 6ஆம் தேதி மாலை மணி 5 அளவில் நிகழ்ந்ததாக கூறப்படும் அச்சம்பவம் குறித்த காணொலி சமூக ஊடகங்களில் பரவலானதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டதாக, பத்து பஹத் போலீஸ் தலைவர் சூப்பரிண்டன் ஷாருலானுார் முஷாதத் அப்துல்லா சனி தெரிவித்தார்.

அவ்வாடவரின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்ட வேளை, சிறுநீர் பரிசோதணையில் அவர் போதைப்பொருள் உட்கொள்ளாதது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ், விசாரணை தொடரப்படுவதாக, ஷாருலானுார் முஷாதத் கூறினார்.

Related News