Nov 7, 2026
Thisaigal NewsYouTube

மாமன்னரின் உத்தரவின் எதிரொலி: நஜிப்பை வீட்டுக்காவலுக்கு மாற்ற வழக்கறிஞர்கள் அவசரக் கோரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாமன்னரின் உத்தரவின் எதிரொலி: நஜிப்பை வீட்டுக்காவலுக்கு மாற்ற வழக்கறிஞர்கள் அவசரக் கோரிக்கை

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரஸாக்கை, காஜாங் சிறையிலிருந்து தாமான் டூத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு உடனடியாக மாற்ற வேண்டும் என அவரது வழக்கறிஞர்கள் சிறைத்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று காலை 11.45 மணிக்கு வெளியிட்ட உத்தரவைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி அன்று வழங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு உத்தரவு தெளிவானது என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாமன்னர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் Messrs Shafee & Co வழக்கறிஞர் குழு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த உத்தரவு நஜிப் ரஸாக்கிற்கு எதிரான பிற வழக்குகளுடன் தொடர்புடையதல்ல என்றும், சட்டத்துறை தலைமை அலுவலகமான ஏஜிசி எழுப்பிய கேள்விகளுக்கும் மாமன்னரின் உத்தரவில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர்கள் இன்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, அவரை உடனடியாக வீட்டிற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
பேங்க் ரக்யாட் இணையத்தளம் முடக்கம்: வங்கிச் சேவைகள் பாதுகாப்பாக உள்ள அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் உறுதி

பேங்க் ரக்யாட் இணையத்தளம் முடக்கம்: வங்கிச் சேவைகள் பாதுகாப்பாக உள்ள அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் உறுதி

பினாங்கு தமிழ்ப்பள்ளிகள் மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு 2.42 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

பினாங்கு தமிழ்ப்பள்ளிகள் மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு 2.42 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

தீபாவளி பண்டிகை நாட்டில் இன ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் - பிரதமர் அன்வார் வாழ்த்து

தீபாவளி பண்டிகை நாட்டில் இன ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் - பிரதமர் அன்வார் வாழ்த்து

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு!

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு!

தைப்பிங் இந்திய சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு 1.85 மில்லியன் ஒதுக்கீடு

தைப்பிங் இந்திய சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு 1.85 மில்லியன் ஒதுக்கீடு

நஜிப் வீட்டுக் காவல் விவகாரம்: மாமன்னரை சந்திக்க சட்டத்துறை தலைவருக்கு அன்வார் உத்தரவு

நஜிப் வீட்டுக் காவல் விவகாரம்: மாமன்னரை சந்திக்க சட்டத்துறை தலைவருக்கு அன்வார் உத்தரவு