சரவாக் மாநிலம் சந்துபோங் தேசிய பூங்காவில் கடந்த வியாழக்கிழமை அனுமதியின்றி தாவர மாதிரிகளைச் சேகரித்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு வெளிநாட்டவர்கள், விசாரணைக்காக மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சரவாக் வனத்துறை கழகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி பிற்பகல் 1.50 மணியளவில் அவர்கள் பூங்காவிலிருந்து வெளியேறும் போது சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சோதனையில் பூங்காவில் இருந்து எடுக்கப்பட்டதாக நம்பப்படும் தாவர மாதிரிகள் நிரப்பப்பட்ட நான்கு பிளாஸ்டிக் பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும், அவர்களிடமிருந்து இரண்டு பைகள் மற்றும் சில பொருட்களும் விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.








