கோலாலம்பூர், ஜனவரி.13-
நேற்று நிகழ்ந்த வெடிச் சம்பவத்தையடுத்து, புக்கிட் டாமான்சாரா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மற்ற பகுதிகளின் பாதுகாப்பினை உறுதிச் செய்ய, ஹெல்ப் பல்கலைக்கழகம், சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அதே வேளையில், ஷா ஆலாம், க்வாசா டாமான்சாராவிலுள்ள சுங்கை பெஸ்தாரி வளாகத்திலும் இதே போன்ற சோதனைகளை நடத்தவிருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
நேற்று பல்கலைக்கழகத்தின், 4-வது தளத்திலுள்ள உணவகத்தின் கம்ப்ரஸர் அறையில், பராமரிப்புப் பணிகள் நடைபெற்ற வந்த நிலையில், அங்கு ஏற்பட்ட எரிவாயுக் கசிவு காரணமாக, இந்த விபத்தானது நிகழ்ந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை தெரிவித்துள்ளது.
இவ்விபத்தில் ஒப்பந்தக்காரர் ஒருவர் உயிரிழந்ததோடு, 9 பேர் காயமடைந்தனர்.
இதனிடையே, வெடிச் சம்பவம் நிகழ்ந்த கட்டிடமானது விசாரணை நிறைவு பெறும் வரையில் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








