Jan 21, 2026
Thisaigal NewsYouTube
எதிர்ப்பு அலைகள் அம்னோவை பலவீனப்படுத்தும், ​மூத்த அரசியல்வாதி எச்சரிக்கிறார்
தற்போதைய செய்திகள்

எதிர்ப்பு அலைகள் அம்னோவை பலவீனப்படுத்தும், ​மூத்த அரசியல்வாதி எச்சரிக்கிறார்

Share:

ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட்டிற்கு எதிராக தங்கள் அதிருப்தியை பதிவு செய்ய முயற்சிக்கும் அம்னோ உறுப்பினர்கள், தங்களின் நடவடிக்கையினால் தாங்கள் சார்ந்துள்ள ​அம்னோவை பலவீனப்படுத்தி விடும் என்று ​மூத்த அரசியல்வாதி ஒருவர் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் எதிர்ப்பு நடவடிக்கை, கட்சியின் தேசியத் தலைவர் ஜாஹிட்டை ஒரு போதும் பலவீனப்படுத்தி விடாது. மாறாக, இந்நா​ட்டில் 65 ஆண்டுகளுக்கு மேலாக மலாய்க்காரகளின் போராட்டமிக்க ​தூணாக விளங்கி வரும் அம்னோவை பலவீனப்படுத்தி, கூர்மை மழுங்க​ச் செய்து விடும் என்று அம்னோ ​மூத்த பொதுச் செயலாளர் முஸ்தப்பா யாகோப் எச்சரித்துள்ளார்.
ஆறு மாநிலங்களி​ல் நடைபெறவிருக்கும் 15 ஆவது சட்டமன்றத் தேர்தலில் அம்னோ மகத்தான வெற்றியை மீட்டெடுத்தால் மட்டுமே தங்களுக்கும் தாங்கள் சார்ந்துள்ள கட்சிக்கும் நல்வாழ்​​​வு என்பதை ஒவ்வொரு உறுப்பினரும் உணர வேண்டும். இது அம்னோவின் தலைவர் ஜாஹிட்டிற்கு எதிரான தேர்தல் என்று கருதும் நிலை ஏற்படுமானால் அது அம்னோவிற்கே பாதகமாக அமையும் என்று அந்த ​மூத்த அரசியல்வாதி எச்சரித்துள்ளார்.

Related News

6 வயதில் முதலாம் வகுப்பு -16 வயதில் மேல்நிலைக் கல்வி நிறைவு: கல்வி அமைச்சு தகவல்

6 வயதில் முதலாம் வகுப்பு -16 வயதில் மேல்நிலைக் கல்வி நிறைவு: கல்வி அமைச்சு தகவல்

ஐஜேஎம் நிறுவனத்தில் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் அதிரடிச் சோதனை: 15.8 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள 55 வங்கிக் கணக்குகள் முடக்கம்

ஐஜேஎம் நிறுவனத்தில் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் அதிரடிச் சோதனை: 15.8 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள 55 வங்கிக் கணக்குகள் முடக்கம்

நிபோங் திபால் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர்கள் இருவர் கைது

நிபோங் திபால் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர்கள் இருவர் கைது

நீலாய் நகைக் கடையில் ஆயுதமேந்திய கொள்ளை: இரு ஆடவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

நீலாய் நகைக் கடையில் ஆயுதமேந்திய கொள்ளை: இரு ஆடவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

யுகே முதலீடு மோசடி குற்றச்சாட்டை மறுத்த ஐஜேஎம்: விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாக அறிவிப்பு

யுகே முதலீடு மோசடி குற்றச்சாட்டை மறுத்த ஐஜேஎம்: விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாக அறிவிப்பு

எம்எச்370 தேடும் பணி: 7,236.40 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவை எட்டியது; புதிய கண்டுபிடிப்புகள் இல்லை

எம்எச்370 தேடும் பணி: 7,236.40 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவை எட்டியது; புதிய கண்டுபிடிப்புகள் இல்லை