Oct 8, 2026
Thisaigal NewsYouTube

கோலா பிலாவில் பள்ளி மாணவர் கொலை: இரு மாணவர்கள் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கோலா பிலாவில் பள்ளி மாணவர் கொலை: இரு மாணவர்கள் மீது குற்றச்சாட்டு

நெகிரி செம்பிலான், கோலா பிலாவில் விளையாட்டுத்துறை பள்ளி விடுதியில் 14 வயது மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே பள்ளியைச் சேர்ந்த படிவம் நான்கில் பயிலும் இரு மாணவர்கள் மீது இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி இரவு 7.30 முதல் 8.50 மணிக்குள் அந்த விடுதியில் சம்பந்தப்பட்ட மாணவரை கொலை செய்ததாக இருவர் மீதும் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் இருவருக்கு எதிரான குற்றச்சாட்டு, உயர் நீதிமன்ற அதிகார வரம்பிற்குள் வருவதால் அவ்விருவரிடமும் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

இருவரும் சிறார்கள் என்பதால் நீதிமன்ற விசாரணை ரகசியமாக நடைபெற்றது. வழக்கு விசாரணை, டிசம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →