Jul 2, 2026
Thisaigal NewsYouTube
கோல சிலாங்கூர் பிகேஆர் ஆண்டுக் கூட்டத்தில் தள்ளு முள்ளு - நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பரபரப்பு
தற்போதைய செய்திகள்

கோல சிலாங்கூர் பிகேஆர் ஆண்டுக் கூட்டத்தில் தள்ளு முள்ளு - நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பரபரப்பு

Share:

இன்று நடைபெற்ற கோலா சிலாங்கூர் பிகேஆர் ஆண்டு பொதுக்கூட்டத்தில், அத்தொகுதியின் தலைவர் எம். சிவபாலன் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான சர்ச்சையால் தள்ளுமுள்ளு சம்பவம் ஏற்பட்டது.

கூட்டம் முடிந்து 20 நிமிடங்களுக்குப் பிறகு, குழு ஒன்று மீண்டும் மண்டபத்திற்குள் வந்து, தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன் விவாதத்திற்கோ வாக்கெடுப்பிற்கோ ஏன் அனுமதிக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பியதாக சிவபாலன் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த தீர்மானத்தை தாம் ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் அது கட்சியின் மத்திய தலைமையிடம் பரிசீலனைக்காக அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், இந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் மூன்று பெண் உறுப்பினர்கள் காயமடைந்து, அவர்களின் கைகளில் வீக்கம் ஏற்பட்டதாகவும் சிவபாலன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ஒரு புகார் சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைமையகத்திலும் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!

நியூசிலாந்து குடியுரிமை தருவதாகக் கூறி 1.33 லட்சம் ரிங்கிட் மோசடி: பாலர் பள்ளி ஆசிரியை மீது நாளை குற்றச்சாட்டு

நியூசிலாந்து குடியுரிமை தருவதாகக் கூறி 1.33 லட்சம் ரிங்கிட் மோசடி: பாலர் பள்ளி ஆசிரியை மீது நாளை குற்றச்சாட்டு

"பெக்கான் நானாஸில் மீண்டும் ஒரு இரத்தக் களரி வேண்டாம்!" –  இளைஞரின் குடும்பம் அவசரக் கோரிக்கை!

"பெக்கான் நானாஸில் மீண்டும் ஒரு இரத்தக் களரி வேண்டாம்!" – இளைஞரின் குடும்பம் அவசரக் கோரிக்கை!

கைதிகள் மீதான தாக்குதல்: தைப்பிங் சிறைக்காவலர்கள் 5 பேர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது

கைதிகள் மீதான தாக்குதல்: தைப்பிங் சிறைக்காவலர்கள் 5 பேர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்