Jul 1, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலானில் மாநிலத் தேர்தல் நடைபெற வாய்ப்பு குறைவு – அன்வார் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலானில் மாநிலத் தேர்தல் நடைபெற வாய்ப்பு குறைவு – அன்வார் அறிவிப்பு

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அரசியல் நிச்சயமற்ற சூழல் நிலவி வரும் நிலையிலும், அங்கு மாநிலத் தேர்தல் நடைபெற வாய்ப்பு குறைவாக இருப்பதாக மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், மாநிலத் தேர்தல் நடைபெற வாய்ப்பு அதிகம் இல்லை என்றாலும் கூட, இறுதி முடிவு நெகிரி செம்பிலான் மாநில யாங் டி பெர்துவான் பெசார் துங்கு முக்ரிஸ் துங்கு முனாவீர் மற்றும் மாநில சட்டமன்றத்தின் நடவடிக்கைகளின் அடிப்படையில் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நெகிரி செம்பிலான் மாநில அரசியல் தொடர்பான எந்த ஒரு முன்னேற்றமும் தகுந்த நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அன்வார் உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையில், இந்த விவகாரம் மற்றும் கூட்டரசு மட்டத்தில் பாரிசான் – பக்காத்தான் உறவுகள் குறித்து அன்வாரை விரைவில் சந்திக்க உள்ளதாக பாரிசான் தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடியும் அறிவித்துள்ளார்.

நெகிரி செம்பிலான் ஆட்சியாளரான சமஸ்தானபதியை நீக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் சர்ச்சை தொடர்பாக நேற்று அம்மாநில அம்னோவைச் சேர்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்கள், நடப்பு மந்திரி பெசார் அமினுடின் ஹருனுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அறிவித்தது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை