Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மலேசியாவிற்கு அமெரிக்கா வாழ்த்து
தற்போதைய செய்திகள்

மலேசியாவிற்கு அமெரிக்கா வாழ்த்து

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.01-

68 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய மலேசியாவிற்கு அமெரிக்கா, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது.

மலேசியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் கட்டி காக்கப்பட்டு வரும் இரு வழி நல்லுறவு, தொடர்ந்து மேன்மையுற வேண்டும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ருபியோ ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அமைதி, பாதுகாப்பு, செழிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நல்லிணக்கம் காக்கப்பட வேண்டும் என்று மலேசியாவிற்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related News