Jul 31, 2026
Thisaigal NewsYouTube
வேதியியல் அறிக்கைக்கு காவல் துறை காத்திருக்கிறது
தற்போதைய செய்திகள்

வேதியியல் அறிக்கைக்கு காவல் துறை காத்திருக்கிறது

Share:

பினாங்கில், இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்த விபத்து குறித்த விசாரணை அறிக்கையை நிறைவு செய்ய வேதியியல் அறிக்கைக்கும் புஸ்பாக்கோம் அறிக்கைக்கும் காவல் துறை காத்திருப்பதாக செபாராங் பெராய் உத்தாரா மாவட்டக் காவல் துறைத் தலைவர் எசிஸ்தன் கமிஷ்னர் முஹமாட் அஸ்ரி ஷாஃபி தெரிவித்தார்.

அந்த இரு அறிக்கைகளும் தமது தரப்புக்குக் கிடைத்த பின்னர், விசாரணை அறிக்கை நிறைவு செய்யப்பட்டு அரசு தரப்பு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்படும் என்றார் அவர்.

இந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுபவர் 3 நாட்கள் தடுப்புக் காவல் இசாரணைக்குப் பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார் எனவும் போதையில் வாகனத்தைச் செலுத்தியது மூச்சுப் பரிசோதனையில் தெரிய வந்ததாகவும் முஹமாட் அஸ்ரி ஷாஃபி தெரிவித்தார்.

Related News