Oct 16, 2026
Thisaigal NewsYouTube

எஸ்.பி.எம். இரண்டாவது தேர்வு அவசியமில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எஸ்.பி.எம். இரண்டாவது தேர்வு அவசியமில்லை

புத்ராஜெயா, டிச.4-


2024 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வை, இரண்டாவது முறையாக நடத்துவதற்கு கல்வி அமைச்சு உத்தேசிக்கவில்லை என்று அதன் அமைச்சர் ஃபாட்ஹ்லினா சீடேக் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கிய எஸ்.பி.எம். தேர்வில், தேர்வு எழுதவிருந்த மொத்த மாணவர்களில் 99 விழுக்காட்டினர், தேர்வில் அமர்ந்து இருப்பதால், கடந்த காலங்களைப் போல இரண்டாவது எஸ்.பி.எம். தேர்வை நடத்துவதற்கு அவசியமில்லை என்று ஃபாட்ஹ்லினா சீடேக் விளக்கினார்.

வெள்ளப் பேரிடர் காலத்தில் எஸ்.பி.எம். தேர்வு தொடங்கிய போதிலும் வெள்ள இடர்றுக்கு உள்ள பகுதிகளில் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள், தேர்வை தவறவிட்டு விடாமல் இருப்பதற்கு கல்வி அமைச்சு முன்கூட்டியே உரிய நடவடிக்கையை எடுத்து விட்டதாக ஃபாட்ஹ்லினா சீடேக் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →