Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பெட்ரோல் மானியம் பெற மைகாட் மட்டுமே ஒரே வழி இல்லை
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் மானியம் பெற மைகாட் மட்டுமே ஒரே வழி இல்லை

Share:

பெனம்பாங், செப்டம்பர்.21-

இனி ரோன்95 பெட்ரோல் மானியம் பெற உங்கள் மைகாட் அட்டை தேவையில்லை! பழுதடைந்த அட்டைகளை மாற்ற மக்கள் காத்திருக்கத் தேவையில்லை என்றும், மானியத்தைப் பெறப் பல மாற்று வழிகள் உள்ளதாகவும் உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவினங்கள் அமைச்சர் அர்மிஸான் முகமட் அலி உறுதியளித்துள்ளார். பெட்ரோனாசின் செட்டெல், ஷெல் ஏப் போன்ற செயலிகள் மூலம் எளிதாக இந்த மானியத்தைப் பெறலாம் என அவர் தெரிவித்தார். எனவே, புதிய பெட்ரோல் மானியத் திட்டத்தின் கீழ் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

Related News