Oct 18, 2026
Thisaigal NewsYouTube

மோனோரயில் தண்டவாளத்தில் குதித்த ஆடவரை போலீஸ் தேடுகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மோனோரயில் தண்டவாளத்தில் குதித்த ஆடவரை போலீஸ் தேடுகிறது

கோலாலம்பூர், செப்டம்பர் 27-

கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங், மோனோரல் நிலையத்தின் இருப்புப்பாதையில் ( இரும்புப்பாதை அல்ல ) குதித்து, அத்துமீறி அடுத்த மருங்கிற்கு கடந்த சென்ற ஆடவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த செப்டபம்ர் 25 ஆம் தேதி இரவு 11.35 மணியளவில் சமூக வலைத்தளங்களில் வைரலான 4 விநாடிகள் ஓட வல்ல காணொளியைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலிஸ்மே அஃபெண்டி சுலைமான் தெரிவித்தார்.

புக்கிட் பிந்தாங் மோனோரல் ரயில் நிலையத்தில் இருப்புப்பாதையில் ஆடவர் கடந்து செல்லும் காட்சி என்ற தலைப்பில் சமூக வலைத்தளங்களில் அந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததாக சுலிஸ்மே அஃபெண்டி குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக நேற்று இரவு 9.34 மணியளவில் PRASARANA நிறுவனத்தின் உதவி போலீசாரிடமிருந்து ஒரு புகார் பெறப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்