Sep 15, 2026
Thisaigal NewsYouTube
அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்
தற்போதைய செய்திகள்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

Share:

சிரம்பான், ஆகஸ்ட்.02-

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், அரச குடும்பத்திற்கு எப்போதும் மரியாதையுடனும் விசுவாசத்துடனும் செயல்பட வேண்டும் என்று நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் Yang di-Pertuan Besar Tuanku Muhriz Tuanku Munawir அறிவுறுத்தியுள்ளார்.

Istana Besar Seri Menanti அரண்மனையில் இன்று நடைபெற்ற புதிய மந்திரி பெசாரின் பதவியேற்பு விழாவில் உரையாற்றிய அவர், மாநில அரசியலமைப்பின் இறையாண்மையைப் பாதுகாப்பதுடன், நெகிரி செம்பிலான் மாநில பாரம்பரிய ஆட்சியாளர் மன்றமான DKU-வுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தையும் மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், மதம், இனம், கலாசாரம் ஆகிய வேறுபாடுகளை மதித்து, பரஸ்பர புரிதல், சகிப்புத்தன்மை மற்றும் ஒற்றுமை உணர்வை அனைவரும் தொடர்ந்து பேண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில், மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து பணியாற்றுவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய Tuanku Muhriz, 16-வது மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

தோல்வியடைந்த வேட்பாளர்களும் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், மக்கள் வழங்கியுள்ள ஆணை மிகப் பெரிய பொறுப்பு என்பதை நினைவூட்டிய அவர், அரசியல் மற்றும் தனிப்பட்ட நலன்களை விட மாநில மக்களின் நலனுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நம்பிக்கை மீறல் எந்தச் சூழலிலும் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் எச்சரித்தார்.

Related News

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்