கோலாலம்பூர், ஜனவரி.03-
வெனிசுலா தலைநகர் காரகாஸில் (Caracas) இன்று அதிகாலை நிகழ்ந்த தாக்குதல் மற்றும் பாதுகாப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்குள்ள மலேசியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை மலேசிய வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, வெனிசுலாவில் உள்ள எந்தவொரு மலேசியருக்கும் இந்தச் சம்பவங்களால் பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் ஏதுமில்லை என்று விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியுள்ளது.
வெனிசூலாவில் இருக்கும் மலேசியர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர் ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், காரகாஸில் உள்ள மலேசியத் தூதரகத்தை அல்லது விஸ்மா புத்ராவை நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








