அரசு மருத்துவமனைகளில் தற்போது பணியாற்றி வரும் 12 ஆயிரத்து 700 ஒப்பந்த மருத்துவர்கள், அடுத்த 3 ஆண்டுகளில் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உத்தரவாதம் அளித்துள்ளார்.
இவ்வாண்டில், கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 300 ஒப்பந்த மருத்துவர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்றும், இதற்காக அரசாங்கம் 1,700 கோடி வெள்ளியை செலவிடவேண்டி வரும் என்று நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் மக்களவையில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட ஒப்பந்த மருத்துவர்கள் நிரந்தரமாக்கப்பட்ட போதிலும், ஒப்பந்தக் கால மருத்துவர்களை நியமிக்கும் நடைமுறை தொடரும் என்று பிரதமர் தெளிவுப்படுத்தினார்.
அதே வேளையில், ஒப்பந்த மருத்துவர்கள் விடுத்துள்ள இதர கோரிக்கைகள் அனைத்தும் கட்டங்கட்டமாக தீர்க்கப்படும் என்று அன்வார் குறிப்பிட்டார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


