சிரம்பான், நவம்பர்.22-
யிகேஎம் எனப்படும் மலேசிய தேசிய பல்லைக்கழகத்தின் நிர்வாகத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறப்படுவது தொடர்பில் நெகிரி செம்பிலான் சமஸ்தானபதி துவாங்கு மூரிஸ் துவாங்கு முனாவீர் இன்று தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அந்த பல்கலைக்காகத்தின் நிர்வாகத்தில் 58.45 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான குத்தகையில் முறைகேடு நிகழ்ந்து இருப்பதாகக் கூறப்படுவது, அந்த முன்னணி பல்கலைக்கழகத்தின் தோற்றத்திற்குக் களங்கத்தை ஏற்படுத்தும் என்று துவாங்கு மூரிஸ் நினைவுறுத்தினார்.
இது போன்ற முறைகேடுகள் பல்லைக்கழகத்தின் தோற்றத்தைக் கெடுக்கும் என்பதுடன் யுகேஎம் மருத்துவமனையின் தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று அந்தப் பல்லைக்கழகத்தின் வேந்தருமான துவாங்கு மூரிஸ் தெரிவித்தார்.
இன்று பாங்கியில் உள்ள யுகேஎம் பல்கலைக்கழகத்தின் 53 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் துவாங்கு மூரிஸ் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.








