Oct 16, 2026
Thisaigal NewsYouTube

அது அந்நிய ஆடவரின் சடலமாகும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அது அந்நிய ஆடவரின் சடலமாகும்

டிச. 11-

செராஸ் பெர்டானா, பண்டார் துன் ஹுசேனில் நேற்று காலையில் சிறப்பு நிற ரிப்பன் கட்டப்பட்ட பயணப்பெட்டிக்குள் கண்டு பிடிக்கப்பட்ட சடலம், அந்நிய நாட்டவருடையது என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ACP Naazron Abdul Yusof தெரிவித்தார்.

செர்டாங் மருத்துவமனையின் சவக்கிடங்கில் இன்று காலையில் நடத்தப்பட்ட தடயவியல் சோதனையில் அது 20 வயது மதிக்கத்தக்க ஓர் அந்நிய ஆடவரின் சடலம் என்று உறுதிப்படுத்தப்பட்டதாக ACP Naazron குறிப்பிட்டார்.

சட்டை மற்றும் அரைக்கால் சிலுவார் அணிந்திருந்த அந்த ஆடவரின் விரலில் வெள்ளியிலான மோதிரம் காணப்பட்டது. மூக்கை தவிர உடலில் வேறு பகுதியில் காயம் எதுவும் கண்டறியப்படவில்லை.
குற்றவியல் சட்டம் 302 பிரிவின் விசாரணை தொடர்நது நடைபெற்று வருவதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →