Dec 4, 2025
Thisaigal NewsYouTube
இரு கும்பல்கள் மோதிக்கொண்டன, எட்டு பேர் கைது
தற்போதைய செய்திகள்

இரு கும்பல்கள் மோதிக்கொண்டன, எட்டு பேர் கைது

Share:

வாகன இழுவை சேவையை வழங்கும் இரண்டு கும்பல்களுக்கு இடையில் நடந்த ஆயுதம் தாங்கிய சண்டை தொடர்பில் போலீசார் எட்டு பேரை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை 11.15 மணியளவில் கோலாலம்பூர், கம்போங் மலேசியா தம்பாஹானில் நிகழ்ந்தது என்று செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சாம் ஹாலிம் ஜமாலுடின் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 22 க்கும் 44 க்கும் இடைப்பட்ட வயதுடைய எண்மரும் உள்ளுரை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் கிள்ளான் பள்ளத்தாக்கில் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News