புக்கிட் காயு ஹீத்தாம், அக்டோபர்.12-
நேற்று முன்தினம் புக்கிட் காயு ஹீத்தாம் குடிநுழைவு வளாகத்தில் 12 வெளிநாட்டினரை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்காமல் திருப்பியனுப்பியுள்ளது மலேசிய எல்லைப் பாதுகாப்பு நிறுவனம் – AKPS. நுழையத் தகுதியற்றவர்கள் என்றும் உண்மையான சுற்றுலாப் பயணிகள் இல்லை எனவும் சந்தேகிக்கப்பட்டவர்கள் மீது தீவிர சோதனையும் நேர்காணலையும் நடத்தியதன் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. எட்டு தாய்லாந்து நாட்டவர்கள், மூன்று இந்திய ஆண்கள், ஒரு மியான்மார் ஆடவர் ஆகியோர் அதே நுழைவுப் பாதை வழியாக அவர்களின் சொந்த நாடுகளுக்கு இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டனர்.








