Sep 24, 2026
Thisaigal NewsYouTube
எல்ஆர்டி3 ஷா ஆலாம் சேவை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்: சிலாங்கூர் சுல்தான்.
தற்போதைய செய்திகள்

எல்ஆர்டி3 ஷா ஆலாம் சேவை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்: சிலாங்கூர் சுல்தான்.

Share:

சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபுத்தீன் இத்ரிஸ் ஷா, புதிதாக செயல்பாட்டுக்கு வந்துள்ள எல்ஆர்டி3 ஷா ஆலாம் ரயில் சேவையைப் பாராட்டியுள்ளார்.

இந்தத் திட்டத்தை முன்னெடுக்க முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் முக்கிய பங்காற்றியதாகவும், அதை முழுமையடையச் செய்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்க்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

மேலும், இந்த எல்ஆர்டி3 சேவை கிள்ளான் , ஷா ஆலாம் மற்றும் கோலாலம்பூர் பகுதிகளுக்கிடையேயான போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பொதுமக்களின் பயணத்தை மேலும் விரைவாகவும் வசதியாகவும் மாற்றும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் வெற்றி ஒரே தரப்பினருக்குச் சொந்தமானதல்ல; பல தரப்பினரின் தொடர்ச்சியான பங்களிப்பால் இது நிறைவேறியதாகவும் சிலாங்கூர் சுல்தான் பெருமிதம் தெரிவித்தார்.

Related News