Sep 24, 2026
Thisaigal NewsYouTube
மூன்று நாள் அரசுமுறைப் பயணம்: மலேசியா வந்தடைந்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம்
தற்போதைய செய்திகள்

மூன்று நாள் அரசுமுறைப் பயணம்: மலேசியா வந்தடைந்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம்

Share:

மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று, சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம், மூன்று நாள் அதிகார்ப்பூர்வப் பயணமாக நேற்று இரவு மலேசியா வந்தடைந்தார்.

அதிபரும் அவரது துணைவியார் ஜானே இத்தோகியும் பயணம் செய்த வர்த்தக விமானம், நேற்று இரவு 9.19 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 1-ல் தரையிறங்கியது.

இன்று ஜூலை 13 முதல் 15-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் இப்பயணமானது திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராயல் ரேஞ்சர் படையின் முதல் பட்டாலியனைச் சேர்ந்த 2 அதிகாரிகள் மற்றும் 26 வீரர்கள் பங்கேற்ற மரியாதை அணிவகுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த அணிவகுப்பிற்கு கேப்டன் முஹம்மது ஹனஃபி ஜாபர் தலைமை தாங்கினார்.

சிங்கப்பூர் அதிபரையும், அவரது துணைவியாரையும், தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங், விமான நிலையத்தில் வரவேற்றார்.

மேலும், மலேசியாவிற்கான சிங்கப்பூர் தூதர் வேணு கோபால மேனனும் இந்த வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டார்.

Related News