Sep 24, 2026
Thisaigal NewsYouTube
ரஷ்யாவில் எல்ப்ரஸ் மலையேற்றத்தின் போது மலேசியர் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

ரஷ்யாவில் எல்ப்ரஸ் மலையேற்றத்தின் போது மலேசியர் உயிரிழப்பு

Share:

ஐரோப்பாவின் மிக உயரமான மலையான ரஷ்யாவின் மவுண்ட் எல்ப்ரஸ் மலையில் ஏறும் முயற்சியின் போது, மலேசியர் ஒருவர் உயிரிழந்ததாக மலேசிய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

இது குறித்து விஸ்மா புத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளூர் சுற்றுலா ஏற்பாட்டாளர் ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்ட மலையேற்றப் பயணத்தில் பங்கேற்ற மூன்று மலேசியர்களில் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

தெற்கு ரஷ்யாவின் காகசஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள மவுண்ட் எல்ப்ரஸ், ஐரோப்பாவின் மிக உயரமான சிகரமாகவும், உலகின் புகழ்பெற்ற 'செவன் சமிட்ஸ்’ மலையேற்றப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கிய மலையாகவும் விளங்குகிறது.

இந்நிலையில், உயிரிழந்த மலையேற்ற வீரர் தொடர்பான விவரங்களும், உயிரிழப்பிற்க்கான காரணமும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

Related News