Jul 13, 2026
Thisaigal NewsYouTube
மூன்று ஆண்டுகளாக நீடித்த சட்டப் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி / ஊழல் வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் சையத் சாதிக் விடுதலை
தற்போதைய செய்திகள்

மூன்று ஆண்டுகளாக நீடித்த சட்டப் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி / ஊழல் வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் சையத் சாதிக் விடுதலை

Share:

கடந்த மூன்று ஆண்டுகளாக மூவார் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான்-இன் அரசியல் பயணத்தையே கேள்விக் குறியாக்கியிருந்த ஊழல் மற்றும் பணமோசடி வழக்கில், அப்பீல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட விடுதலையை மலேசிய கூட்டரசு நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

வழக்குத் தொடர்ந்த அரசு தரப்பின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிபதிகள், அப்பீல் நீதிமன்றம் முன்பு வழங்கிய விடுதலைத் தீர்ப்பு சட்டப்படி சரியானது என்றும், அதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தீர்ப்பளித்தனர்.

நீதிபதிகள் காலின் லாரன்ஸ் செக்குவேரா ஆகிய இருவரும் பெரும்பான்மை தீர்ப்பை வழங்கிய நிலையில், நீதிபதி அபு பக்கர் ஜாயிஸ் மாறுபட்ட தீர்ப்பைப் பதிவு செய்தார்.

இந்தத் தீர்ப்பின் மூலம், கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்த சட்டப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதுடன், சையத் சாதிக்-இன் அரசியல் எதிர்காலமும் உறுதியாகியுள்ளது.

இந்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த அப்பீல் வழக்கின் விசாரணையை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நிறைவு செய்திருந்தது.

சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான், பெர்சாத்து இளைஞர் பிரிவின் அப்போதைய உதவி பொருளாளரான ரஃபிக் ஹக்கீம் ரசாலியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த இளைஞர் பிரிவின் 1 மில்லியன் ரிங்கிட் நிதியை முறைகேடாக கையாடல் செய்யத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

மேலும், அர்மடா பூமி பெர்சத்து எண்டர்பிரைஸ்-இன் மே பேங்க் இஸ்லாமிக் பெர்ஹாட் வங்கிக் கணக்கிலிருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட்டை ,ரஃபிக் ஹக்கீம் மூலமாக எடுத்து, அதனை செலவழிக்கச் செய்து, அந்தத் தொகையை முறைகேடாக கையாடியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, உயர் நீதிமன்றம் சையித் சாதிக் மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளிலும் அவரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.

ஆனால், பின்னர் அப்பீல் நீதிமன்றம் ஒருமனதாக அந்தத் தீர்ப்பை ரத்து செய்து, அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் சையித் சாதிக்கை முழுமையாக விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

Related News

மாலாக்காவில் வெள்ள  பாதிப்பு சீரடைந்தது: நிவாரண மையங்களில் 12 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

மாலாக்காவில் வெள்ள பாதிப்பு சீரடைந்தது: நிவாரண மையங்களில் 12 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

மூன்று நாள் அரசுமுறைப் பயணம்: மலேசியா வந்தடைந்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம்

மூன்று நாள் அரசுமுறைப் பயணம்: மலேசியா வந்தடைந்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம்

ஹோட்டல், வீடு, அழகு நிலையங்களில் மலிவு மருத்துவ சிகிச்சையா? – பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை

ஹோட்டல், வீடு, அழகு நிலையங்களில் மலிவு மருத்துவ சிகிச்சையா? – பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை

ரஷ்யாவில் எல்ப்ரஸ் மலையேற்றத்தின் போது மலேசியர் உயிரிழப்பு

ரஷ்யாவில் எல்ப்ரஸ் மலையேற்றத்தின் போது மலேசியர் உயிரிழப்பு

ஜோகூர் –சிங்கப்பூருக்கு இடையே விரைவுப் போக்குவரத்துத் திட்டம்: உட்லண்ட்ஸில் புதிய ஒருங்கிணைந்த மையம்

ஜோகூர் –சிங்கப்பூருக்கு இடையே விரைவுப் போக்குவரத்துத் திட்டம்: உட்லண்ட்ஸில் புதிய ஒருங்கிணைந்த மையம்

கூடுதல் வருமானத்திற்காக விபச்சாரத்தில் ஈடுபட்ட சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி கைது

கூடுதல் வருமானத்திற்காக விபச்சாரத்தில் ஈடுபட்ட சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி கைது