Sep 24, 2026
Thisaigal NewsYouTube
14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 23 வயது சமூக ஊடக இன்ஃப்ளூயன்சரை 7 நாள் 'ரெமான்'
தற்போதைய செய்திகள்

14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 23 வயது சமூக ஊடக இன்ஃப்ளூயன்சரை 7 நாள் 'ரெமான்'

Share:

14 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதனைப் புகைப்படங்களாகவும் எடுத்த குற்றச்சாட்டின் பேரில், 23 வயதுடைய சமூக ஊடக இன்ஃப்ளூயன்ஸர் ஒருவரைப் போலீஸ் இன்று முதல் ஏழு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

கோலாலம்பூரில் காலணி கடை ஒன்றில் பணிபுரியும் அந்தச் சந்தேக நபர், கடந்த ஜூன் 17 அன்று 14 வயது சிறுமியை வாடகை வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்று இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளதாகக் காங்கார் மாவட்டப் போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் யுஷாரிஃபுத்தீன் முகமட் யூசோப் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள வேளையில், இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டத்தின்கீழ் போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News