Sep 24, 2026
Thisaigal NewsYouTube
பிஜே தங்கும்விடுதி மரண வழக்கு: மேலும் சந்தேக நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

பிஜே தங்கும்விடுதி மரண வழக்கு: மேலும் சந்தேக நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

Share:

கடந்த ஜூலை 8-ஆம் தேதி, பெட்டாலிங் ஜெயாவிலுள்ள தங்கும் விடுதி ஒன்றில் மலேசிய ஆடவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேலும் சில சந்தேக நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இது குறித்து பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஷம்சுதீன் மாமட் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படும் மற்ற சந்தேக நபர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருவதாகவும், புதிய நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் விசாரணைக்கு உதவுவதற்காக இரு ஆண்கள் கடந்த ஜூலை 10-ஆம் தேதி, கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் போது, சுமார் 30 வயதுடைய அந்த ஆடவர், உடலில் காயங்களுடன் தங்கும் விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News