Nov 20, 2025
Thisaigal NewsYouTube
மோனோரயில் தொழில்நுட்ப கோளாற்றில் சிக்கியது:  நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பரிதவிப்பு
தற்போதைய செய்திகள்

மோனோரயில் தொழில்நுட்ப கோளாற்றில் சிக்கியது: நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பரிதவிப்பு

Share:

கோலாலம்பூர், நவம்பர்.20-

கோலாலம்பூர் மாநகரில் மோனோரயில் ஒன்று தொழில்நுட்பக் கோளாற்றில் சிக்கி, திடீரென்று பாதி வழியிலேயே நின்ற நெருக்கடியான சூழலில் மாது ஒருவர் மயக்கமுற்றதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்தச் சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் கோலாலாம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயிலிலிருந்து மேடான் துவாங்கு அருகில் Maju Junction- னில் ஏற்பட்டது. இது தொடர்பான அவசர அழைப்பை, தீயணைப்பு மீட்புப்படை காலை 9.39 மணியளவில் பெற்றுள்ளது.

காலை 9.42 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புப்படையினர், மேடான் துவாங்குவில் பாதி வழியிலேயே மோனோரயில் நிற்பதைக் கண்டனர்.

மோனோரயில் நிர்வாகத்திலிருந்து கிடைக்கப் பெற்றத் தகவலின்படி ரயில் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னரே மோனோரயிலில் உள்ள பயணிகளைக் காப்பாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதன் செயலாக்க தலைமை அதிகாரி முகமட் ரேமி சே ஹாட் தெரிவித்தார்.

ரயிலில் இருந்த 373 பயணிகள் பாதுகாப்பாக இடம் மாற்றப்பட்டனர். இச்சம்பவத்தினால் 58 வயது மாது ஒருவர் மயக்கமுற்றார். மருத்துவ உதவியாளர்கள் அளித்த முதல் உதவி சிகிச்சைக்குப் பின்னர் அந்த மாது சுயநினைவுக்கு வந்தார். பயணிகள் அனைவரையும் மீட்கும் நடவடிக்கை காலை 11.03 மணிக்கு நிறைவு பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

Related News