Jul 6, 2026
Thisaigal NewsYouTube
ஆசிரியையும், மகனும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்
தற்போதைய செய்திகள்

ஆசிரியையும், மகனும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்

Share:

மலாக்கா, ஜூன்.12-

ஆசிரியை ஒருவரும், அவரின் 21 வயது மூத்த மகனும் கொலை செய்யப்பட்ட நிலையில், மலாக்கா, புக்கிட் ரம்பாய், தாமான் ரம்பாய் முத்தியாராவில் உள்ள தங்கள் வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த ஆசிரியையின் 13 வயது மற்றொரு மகன் வீட்டிற்கு வெளியே கார் நிறுத்தும் கொட்டகையில் கடுமையான வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இன்று வியாழக்கிழமை காலையில் அந்த ஆசிரியையின் 17 வயது மகன், வீடு திரும்பிய போது, 51 வயது தனது தாயாரும், சகோதரனும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார்.

பின்னர் இது குறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. மதியம் 12 மணி வரையில் அந்த தரை வீட்டில் போலீசார் தொடர்ந்து தடயவியல் சோதனையை மேற்கொண்டு வருவதாக மலாக்கா மாநில துணை போலீஸ் தலைவர் ஏசிபி அஹ்மாட் ஜெஃப்ரி அப்துல்லா தெரிவித்தார்.

Related News