Oct 21, 2026
Thisaigal NewsYouTube

140 மில்லியன் ரிங்கிட் வரியைக் குறைக்க உதவியதாகக் கூறி 30 மில்லியன் ரிங்கிட் லஞ்சம்; அரசு அதிகாரி கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
140 மில்லியன் ரிங்கிட் வரியைக் குறைக்க உதவியதாகக் கூறி 30 மில்லியன் ரிங்கிட் லஞ்சம்; அரசு அதிகாரி கைது

பல நிறுவனங்களின் மதிப்பீட்டு வரியை 140 மில்லியன் ரிங்கிட் குறைக்க உதவியதற்காக, 30 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கேட்டுப் பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் அரசு அதிகாரி ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

ஐம்பது வயதைக் கடந்த அரசுத் துறைப் பிரிவு இயக்குநரான அந்தச் சந்தேக நபர், 2025ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு வரை லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகிறது. சிலாங்கூர் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை 12.30 மணிக்கு அவர் கைது செய்யப்பட்டார்.

புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம், சந்தேக நபரை ஆறு நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. கைது நடவடிக்கையை எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹாலிம் அமான் உறுதிப்படுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
70 ஆண்டுகால காத்திருப்புக்கு தீர்வு: பிறை கம்போங் மானிஸ் மறுமேம்பாட்டுத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது

70 ஆண்டுகால காத்திருப்புக்கு தீர்வு: பிறை கம்போங் மானிஸ் மறுமேம்பாட்டுத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது

கிள்ளான்  மருத்துவமனையில் கூரை இடிந்து விழுந்தது; நோயாளிகள், ஊழியர்கள் பாதிக்கப்படவில்லை

கிள்ளான் மருத்துவமனையில் கூரை இடிந்து விழுந்தது; நோயாளிகள், ஊழியர்கள் பாதிக்கப்படவில்லை

கோலாலம்பூர் விமான நிலையத்தில் 26ஆம் தேதி முதல் மோப்ப நாய்கள் சோதனை

கோலாலம்பூர் விமான நிலையத்தில் 26ஆம் தேதி முதல் மோப்ப நாய்கள் சோதனை

புகைமூட்டம்: 7 மாநிலங்கள், கோலாலம்பூர், புத்ராஜெயா பள்ளிகள் நாளை வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: 7 மாநிலங்கள், கோலாலம்பூர், புத்ராஜெயா பள்ளிகள் நாளை வழக்கம்போல் இயங்கும்

பள்ளிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடைமுறைகளை மறுஆய்வு செய்ய வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

பள்ளிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடைமுறைகளை மறுஆய்வு செய்ய வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

ஷுஹைலி மீதான புகார்: புக்கிட் அமானில் விசாரணை

ஷுஹைலி மீதான புகார்: புக்கிட் அமானில் விசாரணை