May 24, 2026
Thisaigal NewsYouTube
கோர சாலை விபத்தில் இருவர் பலி
தற்போதைய செய்திகள்

கோர சாலை விபத்தில் இருவர் பலி

Share:

குவாந்தன் , ஆகஸ்ட் 24

குவந்தான், ஜாலான் கம்பங், பத்து 8, என்ற இடத்தில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லோரியின் பின்புறத்தில் கார் ஒன்று மோதியதில் அந்த காரில் பயணித்த இரண்டு ஆடவர்கள் கடும் காயங்களுடன் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து நேற்று இரவு 10.08 மணியளவில் தாங்கள் அவசரத் தகவலைப் பெற்றதாக குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஜஹாரி வான் புசு தெரிவித்தார்.

கார் உபரிப்பாகங்களை வெட்டும் தனது தொழிலாளருடன் மெக்கானிக் ஒருவர் செலுத்திய Proton Waja கார், வேகக்கட்டுப்பாட்டை இழந்து அந்த லோரியை மோதியதாக அவர் குறிப்பிட்டார்.

இதில் 39 மற்றும் 43 வயதுடைய அந்த இரு நபர்களும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News