May 21, 2026
Thisaigal NewsYouTube
சீனாவில் கடும் பனிப்பொழிவு, வாகனங்கள் நிலைக்குத்தின
தற்போதைய செய்திகள்

சீனாவில் கடும் பனிப்பொழிவு, வாகனங்கள் நிலைக்குத்தின

Share:

உலகம் முழுவதும் உள்ள சீனர்கள், வரும் சனிக்கிழமை தங்களின் வருடாந்திர பெருவிழாவான சீனப்புத்தாண்டை வரவேற்கவிருக்கின்றனர். குளிர்காலத்தில் கொண்டாடப்படும் சீனப்புத்தாண்டின் அடையாளமாக சீனாவில் பனிப்பொழிவு ஏற்படுவது வழக்கமாகும். இம்முறை இதுவரை இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

சாலைகளில் படர்ந்துள்ள பனியின் காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய சீனாவின் Hubei மாநிலத்தின் தலைநகரான Wuhan பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளில் பனி தேங்கியுள்ளதால், இரவு நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளன.

ஆயிரக் கணக்கான வாகனங்கள் வெகுதூரத்திற்கு நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்பதை காண முடிகிறது.

Related News