100 விழுக்காட்டிற்கும் கூடுதலான வட்டி என்ற அடிப்படையில் சட்டவிரோதமாக வட்டித் தொழில் நடத்தி வந்ததாக தாயும் மகளும் மலாக்கா, அலோர்காஜா செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
தனித்து வாழும் தாயாரான 53 வயது P. தேவாணி மற்றும் அவரின் மகளான 25 வயது எம். தாட்சாயினி ஆகிய இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுலைக்கும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அலோர் காஜா, தாமான் பெங்காலான் இன்டா, ஜாலான் பெங்காலான் என்ற இடத்தில் இக்குற்றத்தை புரிந்தாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
41 வயது ஏ. பிரான்சிஸ் சேவியர் மற்றும் 26 வயது எஸ்.சி. ராமாயி ஆகியோருக்கு வழங்கிய 4 ஆயிரம் வெள்ளி கடனுக்கு 100 விழுக்காடு வட்டி என்ற அடிப்படையில் 8,250 வெள்ளி வட்டித் தொகையை நிர்ணயித்துள்ளதாக தேவாணி மற்றும் அவரின் மகள் தாட்சாயினி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 10 லட்சம் வெள்ளி அபராதம் அல்லது 5 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 1951 ஆம் ஆண்டு கடன் சட்டத்தின் கீழ் தாயும் மகளும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


