Jun 6, 2026
Thisaigal NewsYouTube
ஏர்ஏசியா விமானங்கள் தரையிறக்கம் என்ற செய்தி முற்றிலும் வதந்தி: நிறுவனம் விளக்கம்
தற்போதைய செய்திகள்

ஏர்ஏசியா விமானங்கள் தரையிறக்கம் என்ற செய்தி முற்றிலும் வதந்தி: நிறுவனம் விளக்கம்

Share:

பிலிப்பைன்ஸ் ஏர்ஏசியா நிறுவனத்தின் விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப்புறம்பானவை என்றும், ஆரோக்கியமான போட்டியை சீர்குலைக்க திட்டமிட்டு நடத்தப்படும் அவதூறு பிரச்சாரம் இது என்றும் ஏர்ஏசியா குழுமம் மறுத்துள்ளது.

வானிலை போன்ற வழக்கமான காரணிகளைத் தவிர, பிலிப்பைன்ஸ் ஏர்ஏசியாவின் அனைத்து விமானச் சேவைகளும் வழக்கம் போல் முழுமையாக இயங்கி வருகின்றன என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. 2021 முதல் 2026 மே வரையிலான காலப்பகுதிக்கான கட்டண நிலுவைத் தொகையான 271 மில்லியன் பேசோஸைச் செலுத்தாததால், அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் விமான நிலையங்களில் பிலிப்பைன்ஸ் ஏர்ஏசியா தனது செயல்பாடுகளை நிறுத்துமாறு பிலிப்பைன்ஸ் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டதாகக் கூறப்படும் நிலையிலும், தங்களின் விமானச் சேவைகள் திட்டமிட்டபடி தொடரும் என்று ஏர்ஏசியா பயணிகளுக்கு உறுதியளித்துள்ளது.

இதுபோன்ற தவறான செய்திகள் பயணிட்டாளர்கள்யே இறுதியில் பாதிக்கும் என்று ஏர்ஏசியா குழுமத்தின் இணை நிறுவனர் டோனி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

ஏர்ஏசியா விமானங்கள் தரையிறக்கம் என்ற செய்தி முற்றிலும் வத... | Thisaigal News