Jun 4, 2026
Thisaigal NewsYouTube
இளைஞர்  வெட்டிக்கொலை : ஏழு பேர் மீது இன்று குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இளைஞர் வெட்டிக்கொலை : ஏழு பேர் மீது இன்று குற்றச்சாட்டு

Share:

இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பில் ஏழு இளைஞர்கள் மீது ஜோகூர், பொந்தியான் நீதித்துறை நீதிமன்றத்தில் இன்று கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த மே 21 அன்று அதிகாலை 2.45 மணியளவில் ஜாலான் உத்தாமா 3, தாமான் உத்தாமா, பெக்கான் நானாஸ் என்ற இடத்தில் ஓர் உணவக முன்புறம் 22 வயது ஆர். அருண்குமார் என்பவரை வெட்டிப் படுகொலை செய்ததாக 18 க்கும் 28 க்கும் இடைப்பட்ட வயதுடைய எல். புவமன் உட்பட எழுவர் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

இன்னும் பிடிபடாமல் தலமைறைவாக உள்ள மேலும் ஐவருடன் கூட்டாக சேர்ந்து இந்த எழுவரும் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட இந்த எழுவருக்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு வருவதால் இவர்களுக்கு ஜாமீன் அனுமதிக்கப்படவில்லை.

Related News