Jun 6, 2026
Thisaigal NewsYouTube
இராக்கான் மூடா உறுப்பினர்களுக்கு குறைந்த கட்டணத்தில் 'பாண்டாப்ரோ' சந்தா
தற்போதைய செய்திகள்

இராக்கான் மூடா உறுப்பினர்களுக்கு குறைந்த கட்டணத்தில் 'பாண்டாப்ரோ' சந்தா

Share:

புட்பாண்டா மலேசியா மற்றும் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சு இடையிலான நீண்டகால வியூகக் கூட்டணியின் கீழ் நாடு முழுவதும் உள்ள 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இராக்கான் மூடா உறுப்பினர்களுக்கு பிரத்யேக 'பாண்டாப்ரோ' சந்தா சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முகமது தவ்ஃபிக் ஜொஹாரி முன்னிலையில் இந்தத் திட்டம் இன்று புத்ராஜெயாவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

இதன் மூலம், பதிவுசெய்த உறுப்பினர்கள் தங்களின் தினசரி உணவு மற்றும் மளிகைப் பொருட்களுக்கான தேவைகளைச் சிக்கனமாகப் பெற முடியும். குறிப்பாக, 12 மாத கால பாண்டாப்ரோ சந்தா திட்டத்திற்கு 30 விழுக்காடு பிரத்யேக தள்ளுபடி வழங்கப்படுவதோடு, வரம்பற்ற இலவச விநியோகம் மற்றும் கூடுதல் தள்ளுபடிகளையும் அவர்கள் பெறலாம் என்று இளைஞர்த, விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முகமது தவ்ஃபிக் விளக்கினார்.

தற்போதைய உறுப்பினர்களுக்கான விவரங்கள் 3 வாரங்களுக்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். புதியவர்கள் dbbelia.gov.my இணையதளத்தில் பதிவு செய்து, 2 முதல் 3 வாரங்களில் இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்