தாப்பா அருகில் உள்ள குனோங் பத்து பூத்தே மலையில், கடந்த மே 24 முதல் ஜஸ்லிந்தா சாலுடின் என்ற 49 வயது பெண்மணி மாயமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அங்கு மலையேற்ற நடவடிக்கைகள் உடனடியாகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகப் பேரா மாநில வனத்துறை இயக்குநர் டத்தோ முகமட் பஸ்ரி அப்துல் மனாஃப் அறிவித்துள்ளார்.
பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்யவும், அப்பகுதியைச் சீரமைக்கவும் இந்தத் தடை 3 முதல் 6 மாதங்கள் வரை நீடிக்கும் என அவர் கூறினார். மேலும், மலையேற்றத்திற்கான கால வரம்பு உள்ளிட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் தீவிரமாக மறுஆய்வு செய்யப்படவுள்ளன.
இதற்கிடையில், இந்தச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பேரா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரானி முகமட், காடுகளின் நிலப்பரப்பை நன்கு அறிந்த உள்ளூர் ஒராங் அஸ்லி மக்களை இனிவரும் மலையேற்றங்கள் மற்றும் தேடுதல் மீட்புப் பணிகளில் கட்டாயம் ஈடுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.








