Jul 1, 2026
Thisaigal NewsYouTube
வாகனத்தை பாலிஷ் செய்ய மறுத்ததால் கண்ணாடி உடைப்பு: தொழிலாளிக்கு RM2,000 அபராதம் !
தற்போதைய செய்திகள்

வாகனத்தை பாலிஷ் செய்ய மறுத்ததால் கண்ணாடி உடைப்பு: தொழிலாளிக்கு RM2,000 அபராதம் !

Share:

கார் கண்ணாடியைச் செங்கல்லால் உடைத்துச் சேதப்படுத்திய வழக்கில், 43 வயது உடல் உழைப்புத் தொழிலாளியான ஆர். பரமேஸ்வரன் என்பவருக்கு ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி காரைச் சுத்தம் செய்து தரும் தனது சேவையை ஏற்க மறுத்த வாகன உரிமையாளரிடம் ஆத்திரமடைந்த பரமேஸ்வரன் , செங்கல்லைக் கொண்டு காரின் கண்ணாடியை உடைத்துள்ளார்.

இதில் காரில் இருந்த உரிமையாளரின் மனைவி மீது கண்ணாடித் துண்டுகள் பட்டுள்ளன. ஒன்பது குழந்தைகளுக்கு தந்தையான பரமேஸ்வரன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 4 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என ஈப்போ மாஜிஸ்திரேட் புனிதா உத்தரவிட்டார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை