Dec 3, 2025
Thisaigal NewsYouTube
செட்டிங் முகப்பிட ஊழல்: கைது செய்யப்பட்ட அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் சொத்துக்களை ஆராய்கிறது எஸ்பிஆர்எம்
தற்போதைய செய்திகள்

செட்டிங் முகப்பிட ஊழல்: கைது செய்யப்பட்ட அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் சொத்துக்களை ஆராய்கிறது எஸ்பிஆர்எம்

Share:

சிப்பாங், செப்டம்பர்.18-

வெளிநாட்டவர்களைச் செட்டிங் முகப்பிடங்களின் வழியாக நாட்டிற்குள் நுழைய அனுமதித்த குற்றத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள குடிநுழைவு அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் சொத்துக் கணக்குகளை எஸ்பிஆர்எம் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்து எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய அனைவரையும் விசாரணை செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், இவ்வழக்கில், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைகளைத் தவிர, பண மோசடி, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி, சட்டவிரோத நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு எதிரான சட்டங்களின் அடிப்படையிலும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடிநுழைவு முகப்பிடங்களில் செட்டிங் அமைத்து, அங்கு சட்டவிரோதமாக வெளிநாட்டவர்களை அனுமதிப்பதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், 1800 முதல் 2,500 ரிங்கிட் வரையில் லஞ்சமாகப் பெற்று வந்தது அண்மையில் வெளிச்சத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Related News