Sep 27, 2026
Thisaigal NewsYouTube
நான் சுமையாக இருக்க விரும்பவில்லை" - தற்கொலைக்கு முயன்ற 14 வயது சிறுமி! பெரும் பரபரப்பு
தற்போதைய செய்திகள்

நான் சுமையாக இருக்க விரும்பவில்லை" - தற்கொலைக்கு முயன்ற 14 வயது சிறுமி! பெரும் பரபரப்பு

Share:

தம்மால் குடும்பத்திற்குச் சுமையாக இருக்கக் கூடாது என்று கருதியதாகக் கூறப்படும் 14 வயது சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

கோலாலம்பூர்- பழைய கிள்ளான் சாலையில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் கணவரால் கைவிடப்பட்ட நிலையில், மாதம் 2,500 ரிங்கிட் வருமானத்தில் மூன்று பிள்ளைகளை வளர்க்கப் போராடி வந்த ஒரு தாய், வீட்டு வாடகை மற்றும் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.

தனது தாயார் படும் கஷ்டங்களைக் கண்டு மனமுடைந்த அந்த 14 வயது சிறுமி, தாம் இல்லாவிட்டால் குடும்பத்தின் சுமை குறையும் என எண்ணி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். தற்போது மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அந்தச் சிறுமியின் குடும்பம், இரண்டு மாத வாடகை நிலுவையால் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் அபாயத்தில் உள்ளது. இந்த நிலையைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்த சமூக ஆர்வலர் அங்கிள் கெண்டாங் என்பவர், அந்தக் குடும்பத்திற்குத் தேவையான உதவிகளை வழங்க முன்வருமாறு பொதுமக்களிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related News