Jul 18, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் ஒழிப்பு கூட்டு நடவடிக்கை: 121 லாரி ஓட்டுநர்கள் கைது:  டத்தோஸ்ரீ முஹம்மது ஹஸ்புல்லா அலி அதிரடி அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் ஒழிப்பு கூட்டு நடவடிக்கை: 121 லாரி ஓட்டுநர்கள் கைது: டத்தோஸ்ரீ முஹம்மது ஹஸ்புல்லா அலி அதிரடி அறிவிப்பு

Share:

வர்த்தக வாகன ஓட்டுநர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் நாடு தழுவிய தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர் கமிஷனர் டத்தோஸ்ரீ முஹம்மது ஹஸ்புல்லா அலி இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்தார்.

தேசிய போதைப்பொருள் துடைத்தொழிப்பு ஏஜென்சியுடன் இணைந்து போக்குவரத்து போலீசார் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை இந்த சோதனையை நடத்தினர். மொத்தம் 627 அதிகாரிகள் இணைந்து, 44 கூட்டு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக 713 பேரிடம் சிறு நீர் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 135 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அதில் 121 பேர் லாரி ஓட்டுநர்கள் என்றும் கமிஷனர் முஹம்மது ஹஸ்புல்லா சுட்டிக்காட்டினார்.

போக்குவரத்து நிறுவனங்கள் தங்களின் ஓட்டுநர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், போதைப்பொருள் விவகாரத்தில் எவ்வித சமரசமும் இன்றி நாடு தழுவிய சோதனைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் கமிஷனர் டத்தோஸ்ரீ முஹம்மது ஹஸ்புல்லா இந்த செய்தியாளர்கள் கூட்டத்தின் வாயிலாக கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

Related News